மின்சாரம் தாக்கியதில் காயமடைந்த மின் ஊழியர் சாவு

ஆலடியில் மின்சாரம் தாக்கியதில் காயமடைந்த மின் ஊழியர் சாவு

Update: 2023-05-14 18:45 GMT

ஆலடி

விருத்தாசலம் அடுத்த முத்தாண்டிக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் மாயவேல் (வயது. 54). இவர் ஆலடி துணை மின் நிலையத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இந்தநிலையில் சம்பவத்தன்று ஆலடி ரைஸ் மில் எதிரே உள்ள மின்மாற்றியில் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அவரை எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியது. இதில், படுகாயமடைந்த அவரை சக ஊழியர்கள் மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர், மேல்சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மாயவேல் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் ஆலடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்