மின்சார பெருவிழா
காவேரிப்பாக்கம் பேரூராட்சியில் மின்சார பெருவிழா நடந்தது.
காவேரிப்பாக்கம் பேரூராட்சியில் ஒளி மிகு பாரதம் ஒளிமயமான எதிர்காலம் குறித்த மின்சார பெருவிழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சோளிங்கர் செயற் பொறியாளர் ஏ.எல்.பாஸ்கரன் தலைமை தாங்கினார். பேரூராட்சி தலைவர் லதா நரசிம்மன், துணைத் தலைவர் தீபிகாமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவி செயற் பொறியாளர் துரைசங்கர் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக வேலூர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் ராமலிங்கம் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது மின்சார நுகர்வோரின் உரிமைகள், மின்சார இணைப்புகளுக்கு கால உச்ச வரம்பு மற்றும் பல்வேறு சேவைகளுக்கான கால உச்ச வரம்பு உள்ளிட்டவைகள் குறித்து எடுத்துரைத்தார். அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டு, மின் சிக்கனம் மற்றும் பாதுகாப்பு குறித்து கவிதை, கலை நிகழ்ச்சி வாயிலாக எடுத்துரைத்தனர். இதனையடுத்து பள்ளி மாணவர்களுக்கு எல்.இ.டி. பல்பு பரிசாக வழங்கப்பட்டது. உதவி பொறியாளர்கள், பேரூராட்சி கவுன்சிலர்கள், பொதுமக்கள், மின்வாரிய அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் உதவி பொறியாளர் ரமேஷ்குமார் நன்றி கூறினார்.