வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முகாம்

செஞ்சியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முகாம் அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆய்வு

Update: 2022-11-12 18:45 GMT

செஞ்சி

தமிழகம் முழுவதும் 12, 13, 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நேற்று தமிழக முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முகாம் அந்தந்த வாக்குச்சாவடிகளில் நடைபெற்றது. செஞ்சியில் காந்தி கடை வீதி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மற்றும் சக்கராபுரம் அரசு நடுநிலைப்பள்ளி ஆகிய இடங்களில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முகாமை சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து அவர் வல்லம் ஒன்றியத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தார். அப்போது செஞ்சி தாசில்தார் நெகருன்னிசா, ஒன்றியக்குழு தலைவர் விஜயகுமார், மாவட்ட விவசாய அணி அஞ்சாஞ்சேரி கணேசன், ஒன்றிய அவை தலைவர் வாசு, மாவட்ட பிரதிநிதி அய்யாதுரை, இளைஞரணி பழனி உள்பட பலர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்