நீரினை பயன்படுத்துவோர் சங்க தேர்தல்

நீரினை பயன்படுத்துவோர் சங்க தேர்தல் அடுத்த மாதம் 5-ந்தேதி நடக்கிறது.

Update: 2023-01-22 18:45 GMT

ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம், பரமக்குடி, திருவாடானை, கீழக்கரை, கமுதி தாலுகாக்களில் நீர்வள, நிலவள திட்டத்தின் கீழ் நீர்வளத்துறையினரால் அமைக்கப்பட்ட நீரினை பயன்படுத்துவோர் சங்கங்களின் தலைவர் மற்றும் ஆட்சி மண்டல தொகுதி உறுப்பினர்களுக்கான தேர்தல் அடுத்த மாதம் 5-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த பதவிகளுக்கு போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் நாளை முதல் 27-ந்தேதி வரை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்பு மனு அளிக்கலாம். வேட்புமனுக்கள் பரிசீலனை 28-ந்தேதி காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை நடைபெறும். ஆய்வுக்கு பின் ஏற்றுக்கொள்ளப்பட்ட வேட்பு மனு விபரம் தேர்தல் அலுவலரால் வெளியிடப்படும். 28-ந்தேதி பிற்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை வேட்புமனுக்களை வாபஸ் பெற்று கொள்ளலாம். வேட்பாளர்கள் இறுதி பட்டியல் அன்று மாலை 5 மணிக்கு அறிவிக்கப்படும். தேர்தல் வாக்குபதிவு அடுத்த மாதம் 5-ந்தேதி காலை 7 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறும். அன்று மாலை 4 மணி முதல் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு சான்றிதழ் வழங்கப்படும். அந்தந்த தாலுகா அலுவலகங்களில் தேர்தல் அலுவலரிடம் வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும். அதன்படி ராமநாதபுரத்தில் ஆர்.டி.ஓ.,

பரமக்குடியில் சப் கலெக்டர்,திருவாடானையில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர், கீழக்கரையில் மாவட்ட வழங்கல் அலுவலர், கமுதியில் ஆயத்துறை உதவி ஆணையர் ஆகியோரிடம் வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய வேண்டும். இந்த தகவலை மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்