வக்கீல்கள் சங்க நிர்வாகிகள் தேர்தல்

தூத்துக்குடி வக்கீல்கள் சங்க நிர்வாகிகள் தேர்தல் நடந்தது.

Update: 2023-04-29 19:00 GMT

தூத்துக்குடி வழக்குரைஞர்கள் சங்கத்தின் 2023-2024-ம் ஆண்டுக்கான நிர்வாகிகள் தேர்தல் சங்க அலுவலகத்தில் நடந்தது. இந்த தேர்தலில் வாக்குரிமை பெற்ற வக்கீல்கள் 560 பேர் வாக்களிக்க தகுதி பெற்ற நிலையில், 491 பேர் வாக்களித்தனர். வக்கீல்கள் பிள்ளை விநாயகம், சந்தனகுமார் ஆகியோர் தேர்தல் அதிகாரிகளாக செயல்பட்டனர்.

இந்த தேர்தலில் தூத்துக்குடி வழக்குரைஞர்கள் சங்க தலைவராக போட்டியிட்ட மூத்த வக்கீல் ஜோசப் செங்குட்டுவன் 309 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட ரூஸ்வெல்ட் 178 வாக்குகள் பெற்றார். மேலும் சங்கத்தின் துணை தலைவராக செல்வின் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட மார்க்கஸ் 250 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இணைச் செயலர் பதவிக்கு போட்டியிட்ட ஆரோக்கிய மேரி 265 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றனர். பொருளாளராக ராஜா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்