தேர்தல் விழிப்புணர்வு கோலப்போட்டி

தேர்தல் விழிப்புணர்வு கோலப்போட்டி நடைபெற்றது.

Update: 2022-10-03 18:35 GMT

விராலிமலை:

விராலிமலை தாலுகா தேர்தல் பிரிவின் சார்பில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு விதமான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி விராலிமலை தாலுகாவில் நேற்று மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் "எனது வாக்கு எனது உரிமை" மற்றும் "ஒரு வாக்கின் சக்தி" என்ற தலைப்பில் விழிப்புணர்வு கோலப் போட்டிகள் நடைபெற்றது. இப்போட்டில் 9 சுய உதவி குழுக்களைச் சேர்ந்த பெண்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு போட்டிப் போட்டுக் கொண்டு கோலம் போட்டனர். இதில் விராலிமலை தாசில்தார் சதீஸ் சிறந்த 3 கோலங்களை தேர்வு செய்து அதன் விபரத்தினை மாவட்ட கலெக்டருக்கு அனுப்பி வைக்கப்பட்டு தேசிய வாக்காளர் தினத்தன்று அவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும் என தெரிவித்ததார். இதில் தேர்தல் துணை தாசில்தார் சரவணன், மண்டல துணை தாசில்தார் சாந்தா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்