களியக்காவிளை அருகே மின்சாரம் தாக்கி மூதாட்டி பலி
களியக்காவிளை அருகே மின்சாரம் தாக்கி மூதாட்டி பலியானார்.
களியக்காவிளை:
களியக்காவிளை அருகே மின்சாரம் தாக்கி மூதாட்டி பலியானார்.
களியக்காவிளை போலீஸ் எல்லைக்குட்பட்ட குளப்புறம் முதக்கன் பழஞ்சியை சேர்ந்தவர் ஜாண்சன். இவருடைய மனைவி லைசாள் (70). ஜாண்சன் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவர்களது பிள்ளைகளுக்கு திருமணம் ஆகி அனைவரும் வெளியூரில் உள்ளனர். லைசாள் குளப்புறத்தில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்தார். இந்தநிலையில் சம்பவத்தன்று வீட்டின் பின்புறம் இரும்பு கம்பியில் துணி உலர வைத்து கொண்டிருந்தார். அப்போது கம்பியில் மின்சாரம் பாய்ந்து லைசாள் பரிதாபமாக இறந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் அடிப்படையில் களியக்காவிளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.