லிப்ட் கதவு என்று நினைத்து பாதுகாப்பு அறையை திறந்த முதியவர் - தவறி விழுந்து உயிரிழப்பு

ஈரோட்டில் லிப்ட் கதவு என்று நினைத்து பாதுகாப்பு அறையை திறந்ததால் தவறி விழுந்த முதியவர் உயிரிழந்தார்.

Update: 2023-11-05 18:36 GMT

ஈரோடு,

ஈரோடு மாவட்டம் திண்டல் மாருதி நகர் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவர், திண்டல் வில்லரசம்பட்டி செல்லும் சாலையில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்புக்கு எதிராக இஸ்திரி கடை வைத்து நடத்தி வந்தார். இந்த நிலையில் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் ரவீந்திரன் என்பவரது வீட்டில் துணிகளை வாங்கிக் கொண்டு லிப்டில் இறங்கியுள்ளார்.

அப்போது, லிப்ட் மாடியில் உள்ள பாதுகாப்பு அறையை திறந்ததால், அவர் தவறி கீழே விழுந்தார். இதில் சுப்பிரமணியின் கை சிக்கி துண்டானதில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சுப்பிரமணியின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்கக்கோரி உறவினர்கள், திண்டலில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கோவை செல்லும் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதையடுத்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்