அரிவாளை காட்டி முதியவருக்கு கொலை மிரட்டல்

மானூர் அருகே அரிவாளை காட்டி முதியவருக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2023-02-06 20:16 GMT

மானூர்:

மானூர் அருகே உள்ள உக்கிரன்கோட்டையை சேர்ந்தவர் மிக்கேல் துரைபாண்டியன் (வயது 77). இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த தாவீது (45) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்தநிலையில், மிக்கேல் துரை பாண்டியனின் உறவினர் வளர்த்து வரும் ஆட்டை, தாவீது தனது மோட்டார் சைக்கிளால் இடித்து தள்ளி விட்டு சென்றுள்ளார்.

இதனை மிக்கேல் துரை பாண்டியன் தட்டிக்கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தாவீது, மிக்கேல்துரை பாண்டியனின் வீட்டுக்கு வந்து அவரை அவதூறாக பேசி, அரிவாளைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். அக்கம்பக்கத்தினர் வரவே, தாவீது அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவாகிவிட்டார்.

இதுகுறித்த புகாரின் பேரில் மானூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பழனி வழக்குப்பதிவு செய்து தாவீதை தேடி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்