திண்டிவனம்
காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே உள்ள நாஞ்சிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் எல்லன் மகன் வெள்ளை(வயது 72). இவர் சம்பவத்தன்று திண்டிவனம் மெயின் ரோட்டில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்ற உறவினரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது சென்னையில் இருந்து திண்டிவனம் நோக்கி வந்த அரசு விரைவு பஸ் அவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த வெள்ளையை அக்கம் பக்கத்தினர் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் திண்டிவனம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.