மின்சாரம் தாக்கி முதியவர் சாவு

மின்சாரம் தாக்கி முதியவர் உயிரிழந்தாா்.

Update: 2022-08-19 16:19 GMT


விழுப்புரம் அருகே உள்ள ஒருகோடி காலனி புதுத்தெரு பகுதியை சேர்ந்தவர் அழகுமுத்து என்கிற ஆறுமுகம் (வயது 65). இவர் விழுப்புரம் மஞ்சுநகர் விரிவாக்கம் பகுதியில் புதியதாக வீடுகள் கட்டும் கட்டிடத்தில் இரவு காவலாளியாக கடந்த ஒரு வாரமாக வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு மழை பெய்த நிலையில் அதிகாலை நேரத்தில் அழகுமுத்து, அங்கிருந்த மெயின் பாக்ஸ் ஸ்விட்ச்சை போட முயன்றபோது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

இதுகுறித்த புகாரின்பேரில் விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்