அரவக்குறிச்சி அருகே உள்ள காமக்காபட்டியை சேர்ந்தவர் ராமசாமி (வயது 62). இவர் நேற்று மாலை புங்கம்பாடி பிரிவில் உள்ள தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று ராமசாமி மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் தூக்கி வீசப்பட்ட ராமசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அவரை அரவக்குறிச்சி போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரவக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து அரவக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.