மனைவி இறந்த துக்கத்தில் முதியவர் விஷம் குடித்து தற்கொலை

மனைவி இறந்த துக்கத்தில் முதியவர் விஷம் குடித்து தற்கொலை

Update: 2022-06-03 21:59 GMT

களியக்காவிளை:

களியக்காவிளை போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட மடிச்சல் பகுதியை சேர்ந்தவர் பாஸ்கரன் (வயது 75). இவருடைய மனைவி கடந்த ஒரு ஆண்டுக்கு முன் உடல்நலக்குறைவால் பரிதாபமாக இறந்தார். அதில் இருந்து பாஸ்கரன் மனமுடைந்த நிலையில் காணப்பட்டு வந்தார்.

இந்தநிலையில் சம்பவத்தன்று பாஸ்கரன் வீட்டில் விஷம் குடித்து இறந்து கிடந்தார். இதைகண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் இதுபற்றி களியக்காவிளை போலீசாருக்கு தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார், பாஸ்கரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்