மது விற்ற மூதாட்டி உள்பட 2 பேர் கைது

திருவையாறு அருகே மது விற்ற மூதாட்டி உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-07-31 19:50 GMT

திருவையாறு;

திருவையாறை அடுத்த கோனேரிராஜபுரத்தை சேர்ந்தவர் தனம்(வயது82), அதே பகுதியை சேர்ந்தவர் ராசு (50). இவர்கள் இருவரும் குடமுருட்டி ஆற்றங்கரை அருகே மது விற்பதாக நடுக்காவேரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் சம்பவ இடத்துக்கு ெசன்ற போலீசார் தனம், ராசு ஆகிய இருவரையும் கைது செய்து 15 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்