பதினெட்டாம்படி சங்கிலி கருப்பசாமி கோவில் பால்குட விழா

மயிலாடுதுறை அருகே பதினெட்டாம்படி சங்கிலி கருப்பசாமி கோவில் பால்குட விழா நடந்தது

Update: 2023-08-15 18:45 GMT

மயிலாடுதுறை அருகே உளுத்துக்குப்பை கிராமத்தில் மகா முக்கண் ஈஸ்வரி, காளிகாதேவி அம்மன் மற்றும் மகா பதினெட்டாம்படி சங்கிலி கருப்பசாமி கோவில் உள்ளது. இந்தகோவிலில் ஆண்டுதோறும் பதினெட்டாம்படி சங்கிலி கருப்பசாமி கோவிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு பக்தர்கள் பால்குடம் எடுத்துவந்து சிறப்பு அபிஷேக ஆராதனை செய்வது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு பால்குட அபிஷேக ஆராதனை விழா கடந்த 13-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.ஆற்றங்கரையில் இருந்து சக்திகரகம் எடுக்கப்பட்டு காளி, கருப்பசாமி வேடமணிந்து நடனம் ஆடியபடி பால்குட ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக கோவிலை சென்றடைந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்தனர். தொடர்ந்து மகா முக்கண் ஈஸ்வரி, காளிகாதேவி அம்பாளுக்கும், சங்கிலிகருப்பசாமிக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டு பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனை நிறைவு செய்யும் வகையில் மகா பாலாபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்