தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கல்வி திட்ட முகாம்

வள்ளிவாகை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கல்வி திட்ட முகாம் நடந்தது.

Update: 2023-08-26 11:53 GMT

துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வள்ளிவாகை கிராமத்தில் உள்ள வள்ளிவாகை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கல்வி திட்ட முகாம் நடந்தது. மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தின் செயலாட்சியர் சீ.சுரேஷ்குமார் தலைமை தாங்கினார்.

நிகழ்ச்சியில் உறுப்பினர்களின் உரிமைகள், கடமைகள், பொறுப்புகள், சங்கத்தின் மூலம் வழங்கப்பட்டு வரும் பயிர் கடன், கால்நடை பராமரிப்பு மூலதனக்கடன், விவசாய நகைக்கடன், நகைக்கடன் பொது, டாப்செட்கோ கடன், டாம்கோக்கடன் மற்றும் அரசின் சேவைகளை உறுப்பினர்களுக்கு தெளிவாகவும், விளக்கமாகவும், விரிவாகவும் எடுத்து கூறப்பட்டது.

இதில் சங்கத்தின் செயலாட்சியர் இரா.விஜயகுமாரி, செயலாளர் எம்.சுரேஷ், திருவண்ணாமலை மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தின் உதவியாளர் வெற்றிவேல், உர விற்பனையாளர் சித்ரா மற்றும் விவசாயிகள், உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்