புதிய கல்விக் கொள்கையை சிலர் எதிர்ப்பதற்கு எந்த காரணமும் இல்லை - மத்திய கல்வித் துறை மந்திரி
இது தொடர்பாக நடத்தப்பட்ட கருத்துக் கேட்புகளில் அனைத்து தரப்பினரும் நேர்மறையான கருத்துகளையே கூறி இருப்பதாக அவர் தெரிவித்தார்.
கொல்கத்தா,
புதிய கல்விக்கொள்கையை சிலர் எதிர்ப்பதற்கு எந்த காரணமும் இல்லை என்று மத்திய கல்வித் துறை மந்திரி தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.
கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "புதிய கல்விக்கொள்கை, வேலைவாய்ப்பை அதிக அளவில் உருவாக்கக்கூடியது. புதிய கல்விக்கொள்கையை சிலர் எதிர்ப்பதற்கு எந்த காரணமும் இல்லை
இது தொடர்பாக கடந்த இரண்டு ஆண்டுகளில் நடத்தப்பட்ட கருத்துக் கேட்புகளில் அனைத்து தரப்பினரும் நேர்மறையான கருத்துகளையே கூறி இருப்பதாகவும் மேற்கு வங்கத்தில் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது தொடர்பாக மாநில அரசுடன் பேச்சு நடத்தப்பட்டு வருவதாகவும்" அவர் தெரிவித்தார்.