கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்து புகார் மனு அளித்தார் எடப்பாடி பழனிசாமி..!
கவர்னர் ஆர்.என்.ரவியை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து புகார் மனு அளித்தார்.
சென்னை,
சென்னை கிண்டி ராஜ்பவனில் கவர்னர் ஆர்.என்.ரவியை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து புகார் மனு அளித்துள்ளார். சட்டம்-ஒழுங்கு, போலி மது, விஷ சாராய மரணம் குறித்து உரிய விசாரணை நடத்தக்கோரி கவர்னரிடம் மனு அளித்துள்ளார்.
இந்த சந்திப்பின் போது எடப்பாடி பழனிசாமியுடன் அதிமுக அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, சி.வி.சண்முகம், ஜெயக்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
முன்னதாக எடப்பாடி பழனிசாமி தலைமையில் சைதாப்பேட்டை சின்னமலையில் இருந்து கவர்னர் மாளிகையை நோக்கி அதிமுகவினர் பேரணியாகச் சென்றனர். இதனால் சென்னையில் ஒருசில இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது இதனால் மக்கள் அவதிக்குள்ளாகினர். எடப்பாடி பழனிசாமியில் தலைமையில் நடைபெற்ற பேரணியில் பல்லாயிரக்கணக்கில் அ.தி.மு.க.வினர் பங்கேற்றனர்.