பூத் கமிட்டி பணிகள் - அதிமுக மாவட்ட செயலாளர்கள், பூத் கமிட்டி பொறுப்பாளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி உத்தரவு
அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது.
சென்னை,
அதிமுக மாவட்ட செயலாளர்கள், பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் கூட்டம் அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று நடைபெற்றது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை கழகத்தில் இந்த கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் பணிகள், பூத் கமிட்டி பணிகள் குறித்து கட்சி நிர்வாகிகளிடம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். மேலும், வரும் 3ம் தேதிக்குள் பூத் கமிட்டி பணிகளை முடிக்க வேண்டுமென கட்சியின் மாவட்ட செயலாளர்கள், பூத் கமிட்டி பொறுப்பாளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.