எடப்பாடி பழனிசாமி உருவ பொம்மை எரிப்பு
வேதாரண்யத்தில் எடப்பாடி பழனிசாமி உருவ பொம்மை எரிக்கப்பட்டது.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க.விற்கு தலைமை ஏற்க வேண்டும் என ஆதரவு தெரிவித்து பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தன. இதை தொடர்ந்து நேற்றுமுன்தினம் சென்னையில் நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் இருந்து வெளியே சென்ற ஓ.பன்னீர்செல்வம் மீது தண்ணீர் பாட்டில் வீசிப்பட்டது.
இந்த நிலையில் அ.தி.மு.க. முன்னாள் நகர துணை செயலாளர் வீரராசு, நகர தகவல் தொழில் நுட்ப அணி தலைவர் சதீஷ் ஆகியோர் ேவதாரண்யம் ராஜாஜி பூங்கா எதிரே முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் உருவ பொம்மையை தீவைத்து எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கோஷங்கள எழுப்பினர். இதில் அ.தி.மு.க.வை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.