பொருளாதார நெருக்கடி எதிரொலி; சென்னையில் எரிபொருள் நிரப்பி செல்லும் இலங்கை விமானங்கள்
இலங்கை விமானங்களுக்கு சென்னை, திருவனந்தபுரம், கொச்சி விமான நிலையங்களில் எரிபொருள் நிரப்பப்பட்டு வருகிறது.
சென்னை,
இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி காரணமாக விமானங்களுக்கு தேவையான எரிபொருள் கிடைப்பதில் தட்டுபாடு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய தொலைதூர நாடுகளுக்கு இயக்கப்படும் விமானங்களுக்கு போதுமான எரிபொருள் கிடைப்பது பெரும் சவாலாக இருந்து வருகிறது.
இதனையடுத்து இலங்கை விமானங்களுக்கு சென்னை, திருவனந்தபுரம், கொச்சி விமான நிலையங்களில் எரிபொருள் நிரப்பப்பட்டு வருகிறது. சென்னை விமான நிலையத்தில் பெரிய ரக விமானத்தில் எரிபொருள் நிரப்பப்பட்டு, அந்த விமானம் இலங்கைக்கு கொண்டு செல்லப்படுகிறது. பின்னர் அந்த விமானத்தில் இருந்து சிறிய விமானங்களுக்கு எரிபொருள் மாற்றப்பட்டு வருகிறது.