எளிதாக பனை மரம் ஏறும் கருவி கண்டுபிடிப்பவருக்கு ரூ.1 லட்சம் விருது
எளிதாக பனை மரம் ஏறும் கருவி கண்டுபிடிப்பவருக்கு ரூ.1 லட்சம் விருது வழங்கப்பட உள்ளது.
பனைமரம் ஏறும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் இன்னலைக் குறைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி, எளிதாக பனைமரம் ஏறுவதற்கு சிறந்த கருவியை கண்டுபிடிக்கும் நபருக்கு ரூ.1 லட்சம் விருது வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது. இந்தப் போட்டியில் பல்கலைக்கழகங்கள், தனியார் நிறுவனங்கள், முன்னோடி விவசாயிகள், தொழிலாளர்கள் கலந்து கொள்ளலாம். சிறந்த கருவிகளைக் கண்டுபிடிப்போரை அறிய தேர்வுக் குழு அமைக்கப்பட்டு உள்ளது. போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் நிறுவனங்கள், தனிப்பட்ட நபர்கள் www.tnhorticulture.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.
இந்த தகவலை தூத்துக்குடி மாவட்ட தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் சுந்தர்ராஜ் தெரிவித்து உள்ளார்.