எட்டயபுரத்தில் கிழக்கு ஒன்றிய தி.மு.க பொதுக்கூட்டம்

எட்டயபுரத்தில் கிழக்கு ஒன்றிய தி.மு.க பொதுக்கூட்டம் நடந்தது.

Update: 2023-01-26 18:45 GMT

எட்டயபுரம்:

கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் எட்டயபுரம் பட்டத்து விநாயகர் கோவில் முன்பு மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மார்கண்டேயன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பேசினார். எட்டயபுரம் பேரூராட்சி மன்ற தலைவர் ராமலட்சுமி சங்கரநாராயணன், மாவட்ட மருத்துவ அணி செயலாளர் சவுந்திரராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்

கூட்டத்தில் மாநில நெசவாளர் அணி துணைச் செயலாளர் வசந்தம் ஜெயக்குமார், தலைமை கழக பேச்சாளர்கள் வெள்ளைச்சாமி, ராதாகிருஷ்ணன், கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் நவநீத கண்ணன், விளாத்திகுளம் மேற்கு செயலாளர் அன்புராஜன், புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ், விளாத்திகுளம் பேரூராட்சி தலைவர் அய்யன்ராஜ், துணைத் தலைவர் வேலுச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்