மின் நுகர்வோர் கூட்டம் நாளை நடக்கிறது
மின் நுகர்வோர் கூட்டம் நாளை நடக்கிறது.
தமிழ்நாடு மின்சார வாரிய அரியலூர் கோட்டத்திற்கு உட்பட்ட அரியலூர் நகரம், செந்துறை, ஜெயங்கொண்டம் நகரம், ஜெயங்கொண்டம் கிராமியம், ஆண்டிமடம், திருமானூர் ஆகிய உபகூட்டங்கள் உட்பட்ட அனைத்து மின் நுகர்வோர்கள் ஆலோசனை கூட்டம் அரியலூர் ராஜாஜி நகர் மருத்துவ கல்லூரி எதிரில் உள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. காலை 10 மணி முதல் 5 மணி வரை நடைபெற்றும் இந்த கூட்டத்தில் வீடு, விவசாயம், குடிசை மின் இணைப்புகளுக்கு ஆதார் எண் இணைத்தல், மின் இணைப்புகளில் பெயர் மாற்றம் சம்பந்தமாக தீர்வுகாணப்படுகிறது. வருகிற 13-ந் தேதியும் இதே கூட்டம் நடைபெறுகிறது என செயற்பொறியாளர் அசோக்குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.