மின்நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
மின்நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை கோட்டத்திற்குட்பட்ட புதுக்கோட்டை, இலுப்பூர், கந்தர்வகோட்டை பகுதிக்கான மின்நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் புதுக்கோட்டை மின்வாரிய மேற்பார்வைபொறியாளர் அலுவலகத்தில் இன்று (வியாழக்கிழமை) காலை 10.30 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது. இதில் மின்நுகர்வோர்கள் மற்றும் பொதுமக்கள் மின்வாரிய சம்பந்தமான குறைகளை தெரிவித்து நிவர்த்தி செய்துக்கொள்ளலாம் என புதுக்கோட்டை மின்சார வாரிய அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.