பல்லாவரத்தில் ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சார் பதிவாளர் கைது

பல்லாவரத்தில் ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சார் பதிவாளர் கைது செய்யப்பட்டார்.;

Update:2023-03-30 12:19 IST

சென்னை அடுத்த கோவிலம்பாக்கம் கொளத்தூர் மாரியம்மன் கோயில் 6-வது தெருவை சேர்ந்தவர் சரவணன். இவரது பூர்வீக சொத்தான 1,098 சதுர அடி நிலம் கோவிலம்பாக்கத்தில் உள்ளது. இந்த நிலையில், தற்போது சரவணனின் சகோதரியின் திருமணத்திற்காக சொத்தினை வங்கியில் அடமானம் வைக்க சென்றபோது, வங்கியில் செட்டில்மெண்ட் பத்திரத்தில் பெயரை மாற்றி வரும்படி கோரியுள்ளனர். எனவே சரவணன் நேற்று முன்தினம் பல்லாவரத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்திற்கு சென்று பெயர் மாற்றம் அணுகியுள்ளார்.

அப்போது சார்பதிவாளர் செந்தில்குமார் பத்திரத்தில் பெயர் மாற்றம் செய்து தர தனக்கு ரூ.5ஆயிரம் லஞ்சமாக கொடுக்க வேண்டுமென கேட்டுள்ளார். பின்னர் லஞ்ச பணத்தை ரூ.2 ஆயிரமாக குறைத்துக் கொண்டதாக தெரிகிறது. இந்தநிலையில், லஞ்சம் கொடுக்க விரும்பாத சரவணன் சென்னை லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார். இதைத்தொடர்ந்து சார்பதிவாளர் செந்தில்குமாரை கையும் களவுமாக பிடிக்க லஞ்ச ஒழிப்பு போலீசார் திட்டமிட்டனர். இதையடுத்து, சரவணனிடமிருந்து லஞ்ச பணம் ரூ.2ஆயிரத்தை சார்பதிவாளர் செந்தில்குமார் அறிவுறுத்தலின் பேரில், இடைத்தரகராக செயல்பட்ட சிவக்குமார், பெற்றபோது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை அலுவலர்களால் இருவரும் கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்