ஆயிரத்தம்மன் கோவிலில் தசரா விழா கால்நாட்டுதல் நிகழ்ச்சி

பாளையங்கோட்டை ஆயிரத்தம்மன் கோவிலில் தசரா திருவிழா கால்நாட்டுதல் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

Update: 2022-08-27 19:34 GMT

பாளையங்கோட்டை ஆயிரத்தம்மன் கோவிலில் தசரா திருவிழா கால்நாட்டுதல் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

தசரா விழா

பாளையங்கோட்டை அம்மன் கோவில்களில் ஆண்டுதோறும் தசரா விழா சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு தசரா திருவிழா வருகிற செப்டம்பர் மாதம் அமாவாசை தினத்தன்று பாளையங்கோட்டை ஆயிரத்தம்மன் கோவிலில் கொடி ஏற்றத்துடன் தொடங்குகிறது.

இதையொட்டி கால்நாட்டுதல் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. ஆயிரத்தம்மன் கோவிலில் அதிகாலை நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனம் மற்றும் அபிஷேக, அலங்கார பூஜைகள் நடைபெற்றது.

கால்நாட்டு

கால்கோள் விழாவுக்கான கொடிகம்பம் அர்ச்சனை செய்யப்பட்டு ரதவீதிகளில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. காலை 10.40 மணி அளவில் கால் நாட்டப்பட்டு, பூஜைகள் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதை தொடர்ந்து பக்தர்கள் விரதத்தை தொடங்கினார்கள்.

இதேபோல் பாளையங்கோட்டையில் அமைந்துள்ள மற்ற அம்மன் கோவில்களிலும் நேற்று கால் நாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்