குப்பைமேட்டை அகற்றி தூய்மைப்படுத்தும் பணி; அமைச்சர் தொடங்கி வைத்தார்

ஆறுமுகநேரியில் குப்பைமேட்டை அகற்றி தூய்மைப்படுத்தும் பணியை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

Update: 2022-09-10 12:12 GMT

ஆறுமுகநேரி:

ஆறுமுகநேரியில் குப்பைமேட்டை அகற்றி தூய்மைப்படுத்தும் பணியை அமைச்சர் அனிதா ராதரகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

கோரிக்கை

ஆறுமுகநேரி நகரப்பஞ்சாயத்திற்கு எதிரே உள்ள காலி இடத்தில் நகர பஞ்சாயத்து பகுதியில் உள்ள குப்பைகள் கொட்டப்பட்டன. தற்போது அந்த குப்பைகள் பெரிய மலை போன்ற மேடாக மாறிவிட்டது. இதனால் மழைக்காலங்களில் துர்நாற்றம் வீசியும், வெயில் காலங்களில் மர்ம நபர்களால் தீ வைக்கப்படுவதால் புகை மண்டலம் ஏற்பட்டு பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர்.

இதனை அகற்றி வணிக வளாகம் அமைக்க ஏற்பாடு செய்து தரும்படி அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம், நகரப்பஞ்சாயத்து தலைவர் கலாவதி கல்யாணசுந்தரம், துணைத்தலைவர் கல்யாணசுந்தரம் ஆகியோர் கோரிக்கை வைத்தனர். அதன்படி அரசின் சார்பில் தூய்மை இந்தியா திட்டத்தின் படி உயரி அகழ்வு முறையில் நிலத்தை மீட்டெடுத்தல் என்ற முறையில் அந்த குப்பைகளை எந்திரங்கள் மூலம் அரைத்து வெளியேற்றி தன் தரையாக மாற்ற ரூ.1.44 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதற்கான பணி தொடக்க விழா நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நகரப்பஞ்சாயத்து தலைவி கலாவதி கல்யாணசுந்தரம் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் கல்யாணசுந்தரம், நகர தி.மு.க. செயலாளர் ஏ.கே.நவநீத பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிர்வாக அதிகாரி கணேசன் வரவேற்றார்.

அமைச்சர் தொடங்கி வைத்தார்

நிகழ்ச்சியில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு, அங்கு அமைக்கப்பட்டிருந்த ராட்சத எந்திரத்தின் மூலம் குப்பைகளை அகற்றும் பணியை சுவிட்ச் ஆன் செய்து தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் மாநில தி.மு.க. மாணவர் அணி துணை அமைப்பாளர் உமரி சங்கர், திருச்செந்தூர் ஒன்றிய தி.மு.க. செயலாளர் செங்குழி ரமேஷ், நகரப்பஞ்சாயத்து என்ஜினீயர் ஆவுடையப்பன், திருச்செந்தூர் செந்தில்குமார், ஆறுமுகநேரி நகர தி.மு.க. அவைத் தலைவர் சிசுபாலன், நகர பொருளாளர் பாலசுப்பிரமணியம், மாவட்ட பிரதிநிதி ஏ.ஆர்.ராதா கிருஷ்ணன், ஒப்பந்தக்காரர் பிரபாகரன் மற்றும் நகரப்பஞ்சாயத்து கவுன்சிலர்கள், பணியாளர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்