குப்பை கிடங்கில் இருந்து வெளியேறும் புகையால்மூச்சு திணறல் ஏற்படுவதாக சாலை மறியல்சோலார் அருகே பரபரப்பு

சோலார் அருகே பரபரப்பு

Update: 2023-02-15 20:33 GMT

சோலார் அருகே குப்பை கிடங்கில் இருந்து வெளியேறும் புகையால் மூச்சு திணறல் ஏற்படுவதாக பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டார்கள்.

சாலை மறியல்

சோலார் அருகே உள்ள முத்துகவுண்டன் பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பெரியார் நகரில் 370 வீடுகள் உள்ளன.

இந்த குடியிருப்புக்கு அருகே 46 புதூர் ஊராட்சியை சேர்ந்த பகுதியிலிருந்து கொண்டுவரப்படும் குப்பைகளை சேமித்து பிரித்தெடுக்கும் கிடங்கு செயல்பட்டு வருகிறது. இந்த கிடங்கில் உள்ள குப்பைகளை தீவைத்து எரித்து வருவதாகவும், அதிலிருந்து வெளியேறும் புகையானது இந்த பகுதி முழுவதும் உள்ள குடியிருப்புகளுக்குள் பரவி பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும் தெரிகிறது. இந்தநிலையில் நேற்று காலை 11 மணியளவில் முத்துகவுண்டன் பாளையம் ரிங்ரோட்டில் திடீரென திரண்ட அப்பகுதி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

போக்குவரத்து பாதிப்பு

இதுபற்றி தகவல் அறிந்ததும் மொடக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் தீபா போலீசாருடன் சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது பொதுமக்கள், குப்பை கிடங்கில் இருந்து எரிக்கப்படும் புகையால் எங்களுக்கு மூச்சு திணறல், மயக்கம், காய்ச்சல், தலைவலி, உடல் சோர்வு உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுகிறது. நாங்கள் இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்து விட்டோம். ஆனால் யாரும் செவி சாய்க்கவில்லை என்றார்கள்.

அதற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் தீபா, இதுகுறித்து உரிய அதிகாரிகளிடம் தெரிவித்து உடனே தீர்வு காணப்படும் என்று உறுதி அளித்தார். இதையடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றார்கள்.

இந்த சாலை மறியல் போராட்டத்தால் திண்டல் கொக்கராயன் பேட்டை ரிங் ரோட்டில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்