தண்ணீர் இல்லாததால் எள் விளைச்சல் குறைந்தது

தண்ணீர் இல்லாததால் எள் விளைச்சல் குறைந்து விட்டது. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.;

Update:2022-07-21 00:37 IST

தாயில்பட்டி, 

தண்ணீர் இல்லாததால் எள் விளைச்சல் குறைந்து விட்டது. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

எள் சாகுபடி

வெம்பக்கோட்டை அருகே உள்ள குகன் பாறை, சங்கரபாண்டியபுரம், சிப்பிபாறை, கஸ்தூரி ரெங்காபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மானாவாரி பயிரான எள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது அறுவடை முடிந்து தரம் பிரிக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து குகன் பாறை விவசாயி புஷ்பராஜ் கூறியதாவது:-

எள் உழவு செய்யும் சமயத்தில் கோடை மழை பெய்ததால் விவசாயிகள் ஆர்வத்துடன் எள்ளை சாகுபடி செய்தனர். அப்ேபாது கிலோ ரூ.70-க்கு விற்பனையானது. பின்னர் ரூ.100 ஆக உயர்ந்து. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

விவசாயிகள் கவலை

அறுவடைக்கு பின்பு மேலும் விலை உயர வாய்ப்பு இருக்கிறது என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் காத்திருந்தனர்.

ஆனால் விவசாயிகள் எதிர்பார்த்த சமயத்தில் மழை இல்லாததாலும், கண்மாயில் தண்ணீர் வற்றியதாலும் எள்ளை காப்பாற்ற முடியாமல் சிரமப்பட்டனர். பயிர்களை காப்பாற்ற ஓடைகளில் தேங்கி இருந்த நீரை மோட்டார் மூலமாக கொண்டு சென்றனர். போதிய தண்ணீர் இல்லாததால் பயிரின் வளர்ச்சி குன்றி எதிர்பார்த்த மகசூல் தற்போது கிடைக்கவில்ைல. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்