ஆலங்குடியில் போதிய மழை பெய்யாததால் தண்ணீரை விலைக்கு வாங்கி பயிர்களுக்கு பாய்ச்சும் அவலம்

ஆலங்குடியில் போதிய மழை பெய்யாததால் தண்ணீரை விலைக்கு வாங்கி பயிர்களுக்கு பாய்ச்சும் அவலம் ஏற்பட்டுள்ளது.

Update: 2023-02-25 18:48 GMT

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி, வம்பன் அரசடிப்பட்டி, அரையப்பட்டி கொத்தமங்கலம், கீரமங்கலம், வடகாடு, நெடுவாசல், புள்ளான்விடுதி, வேங்கிடகுளம் மாங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் மானாவாரியாக கடலை சாகுபடி செய்துள்ளனர்.

இந்தநிலையில் ஆலங்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் போதிய அளவு மழை ெபய்யாததால் விவசாயிகள் அவதியடைந்து வருகிறார்கள். இதனால் பயிர்கள் கருகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, பாத்தம்பட்டியை சேர்ந்த விவசாயி ஒருவர் பயிர் கருகாமல் இருக்க டேங்கர் லாரியில் இருந்து தண்ணீரை விலைக்கு வாங்கி பயிர்களுக்கு பாய்ச்சி வருகிறார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், பருவம் தவறி மழை பெய்வதால் விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள். கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள், உளுந்து, சோளம் ஆகியவை சேதம் அடைந்தன. தற்போது போதிய அளவு மழை பெய்யாததால் பயிர்கள் கருகும் அவலம் ஏற்பட்டு உள்ளது. எனவே மத்திய, மாநில அரசுகள் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்