தொடர்மழை காரணமாக செய்யூர் அரசு ஆஸ்பத்திரியில் மழைநீர் புகுந்தது

தொடர்மழை காரணமாக செய்யூர் அரசு ஆஸ்பத்திரியில் மழைநீர் புகுந்தது. நோயாளிகள் அங்கிருந்து வேறு ஆஸ்பத்திரிகளுக்கு மாற்றப்பட்டனர்.

Update: 2024-01-08 21:42 GMT

செய்யூர்,

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் சுற்றுவட்டார பகுதியில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

தொடர் மழை காரணமாக செய்யூர் அரசு ஆஸ்பத்திரிக்குள் மழைநீர் புகுந்தது. இதனால் அங்கு இருந்த நோயாளிகள் மிகுந்த அவதிக்குள்ளானார்கள்.

இடமாற்றம் செய்யப்பட்டனர்

அங்கு இருந்த நோயாளிகள் செங்கல்பட்டு மற்றும் மதுராந்தகம் அரசு ஆஸ்பத்திரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். மழையால் விவசாய நிலங்கள் தண்ணீர் தேங்கி நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கியுள்ளது. இதனால் விவசாயிகள் மிகுந்த அவதிக்குள்ளானார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்