குடும்ப தகராறு காரணமாக இளம்பெண் தீக்குளித்து தற்கொலை - காப்பாற்ற சென்ற கணவரும் படுகாயம்

குடும்ப தகராறு காரணமாக இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். அவரை காப்பாற்ற சென்ற கணவரும் தீக்காயம் அடைந்த நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Update: 2022-12-27 10:02 GMT

கும்மிடிப்பூண்டி அடுத்த பாதிரிவேடு அருகே உள்ளது பூதூர் கிராமம். இந்த கிராமத்தில் வசித்து வருபவர் பிரபு (வயது 38). இவர் சிறுபுழல்பேட்டை ஊராட்சி மன்ற செயலாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் மீஞ்சூர் அடுத்த பட்டமந்திரி கிராமத்தை சேர்ந்த இலக்கியா (31) என்பவருக்கும் திருமணமாகி 6 வருடங்கள் ஆகியது. இவர்களுக்கு ஒரு மகன், மற்றும் ஒரு மகள் உள்ளனர். கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், நேற்று முன்தினம் கணவருடன் ஏற்பட்ட தகராறால் இலக்கியா, தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். அவரை காப்பாற்ற சென்ற கணவர் பிரபுவின் கைகளிலும் தீக்காயம் ஏற்பட்டது. பலத்த தீக்காயம் அடைந்த இளம்பெண் இலக்கியாவும், அவரது கணவர் பிரபுவும் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி இலக்கியா பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து பாதிரிவேடு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். திருமணமாகி 6 வருடமே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்