தமிழ்நாட்டில் பிப்.21 வரை வறண்ட வானிலை நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்களுக்கு வறண்ட வானிலையே நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Update: 2023-02-17 08:25 GMT

சென்னை,

தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் இன்று முதல் பிப்.21-ம் தேதி வரை வறண்ட வானிலையே நீடிக்கும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அதிகாலை நேரத்தில் பனிமூட்டம் ஏற்பட வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

அதிகபட்ச வெப்பநிலை 31-32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 21-22 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

 

Tags:    

மேலும் செய்திகள்