"போகாத ஊருக்கு டிக்கெட் கேட்டு தகராறு " - நடத்துநரிடம் தகராறு செய்த போதை ஆசாமி - பஸ்சில் நடந்த அடிதடி...

ராசிபுரத்தில் குடிபோதையில் பஸ் கண்டக்டரிடம் போகாத ஊருக்கு டிக்கெட் கேட்டு தகராறில் ஈடுப்பட்டவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-10-13 05:51 GMT

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து அரசு பஸ் காரவள்ளியை நோக்கி சென்று கொண்டிருந்தது. பஸ்சில் போதை ஆசாமி ஒருவர் பஸ் செல்லாத இடத்திற்கு நடத்துனரிடம் பயண சீட்டு கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றவே போதை ஆசாமி கண்மூடித்தனமாக நடத்துனரை சரமாறியாக தாக்கியுள்ளார்.

பின்னர் இது குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து குடிபோதையில் பஸ் நடத்துனரிடம் போகாத ஊருக்கு டிக்கெட் கேட்டு தகராறில் ஈடுப்பட்ட இளைஞரை கைது செய்தனர்.

பஸ்சில் இருந்த பயணிகள் பஸ்சை நிறுத்துமாறு ஓட்டுனரிடம் கூறியதையடுத்து கீழே இறங்கிய நடத்துனர் மற்றும் போதை ஆசாமியும் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொள்ளும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்