நீலகிரியில் போதைப் பொருள் பயன்பாட்டை தடுக்க வேண்டும்-பா.ஜனதா செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்

நீலகிரியில் போதைப் பொருள் பயன்பாட்டை தடுக்க வேண்டும்- பா.ஜனதா செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்

Update: 2023-06-04 18:45 GMT

ஊட்டி

நீலகிரி பா.ஜ.க. செயற்குழு கூட்டம் ஊட்டியில் நடைபெற்றது. கூட்டத்தில், ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட 36 வார்டுகளில் குடிநீர், சாலை, கழிப்பிடம், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை சரியாக ஏற்படுத்தித் தர வேண்டும். மார்க்கெட் பகுதியில் குப்பைகளை அகற்ற வேண்டும். ஊட்டியில் வாகன நிறுத்தும் இடம் ஏற்படுத்த வேண்டும். ஏ.டி.சி. முதல் மணிக்கூண்டு வரை உள்ள சாலையை சரி செய்ய வேண்டும். நீலகிரியில் அதிகரித்து உள்ள போதை பொருட்கள் பயன்பாட்டை தடுக்க வேண்டும். டாஸ்மாக் மது கடையில் மது வாங்கி கடை முன்பாக மது குடிப்பதால் அந்த வழியாக செல்லும் பெண்கள், பள்ளி குழந்தைகள் சிரமப்படுகின்றனர். இந்த நிலையை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.


Tags:    

மேலும் செய்திகள்