மோட்டார் சைக்கிள் மோதி மருந்து கடை ஊழியர் பலி

கூத்தாநல்லூரில் மோட்டார் சைக்கிள் மோதி மருந்து கடை ஊழியர் பலியானார்.

Update: 2022-08-11 18:23 GMT

கூத்தாநல்லூர்:

கூத்தாநல்லூர், புளியங்குடி, வடக்கு தெருவை சேர்ந்தவர் அமானுல்லா (வயது68).இவர் கூத்தாநல்லூர் பெரியக்கடைத்தெருவில் உள்ள மருந்து கடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் நேற்று வழக்கம் போல் மருந்து கடையில் வேலைப்பார்த்த அவர் அருகில் உள்ள கடைக்கு டீ குடிப்பதற்கு நடந்து சென்றுள்ளார். அப்போது, திருத்துறைப்பூண்டி, பைங்காட்டூர் வடக்கு தெருவை சேர்ந்த ராஜவேல் (30) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் அமானுல்லா மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், மோட்டார் சைக்கிளை ஓட்டிவந்த ராஜவேல் படுகாயம் அடைந்து திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.இது குறித்து கூத்தாநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்