நகரசபை தூய்மை பணியாளர்களுக்கு போதை மீட்புவிழிப்புணர்வு கூட்டம்

கோவில்பட்டியில் நகரசபை தூய்மை பணியாளர்களுக்கு போதை மீட்புவிழிப்புணர்வு கூட்டம் நடந்தது.

Update: 2022-08-26 15:49 GMT

கோவில்பட்டி:

கோவில்பட்டி நகரசபை தூய்மைக்கான மக்கள் இயக்க நிகழ்வின் ஒரு பகுதியாக, தூய்மை பணியாளர்களுக்கு போதை மீட்பு மற்றும் மறுவாழ்வு விழிப்புணர்வு மற்றும் கருத்துரை வழங்கும் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு நகரசபை தலைவர் கருணாநிதி தலைமை தாங்கினார். ஆணையாளர் ராஜாராம் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் சுகாதார அலுவலர் நாராயணன் வரவேற்று பேசினார். கூட்டத்தில் கோவில்பட்டி ஆல்கஹாலிஸ் அனானிமஸ் குழுவைச் சேர்ந்த சுரேஷ், ஸ்ரீராமன் ஆஸ்கார் சுப்புராஜ் ஆகியோர் போதை மீட்பு மறுவாழ்வு பெறுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினா். கோவில்பட்டி சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் அலுவலக மாவட்ட நலக் கல்வியாளர் முத்துசாமி போதை பழக்கத்திலிருந்து எவ்வாறு மீண்டு வருவது என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

கூட்டத்தில் கோவில்பட்டி நகரசபை தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை நகரசபை சுகாதார ஆய்வாளர்கள் முருகன், வள்ளி ராஜ், காஜா ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்