போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி

போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி

Update: 2022-08-26 16:14 GMT

விருதுநகரில் வெள்ளைச்சாமி நாடார் பாலிடெக்னிக் கல்லூரி மாணவ-மாணவிகள் கலந்து கொண்ட போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை விருதுநகர் கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜசுலோச்சனா கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த பேரணியானது விருதுநகர் அல்லம்பட்டி முக்கு ரோட்டில் தொடங்கி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, தேசபந்து மைதானம், மெயின் பஜார் வழியாக வந்து நகராட்சி அலுவலகம் முன்பு முடிவடைந்தது. இதில் திரளான கல்லூரி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு போதையை வளர்க்காதே, வாழ்வை இழக்காதே, போதையில் ஆடாதே பாதியிலே போகாதே, போதையானது விலை கொடுத்து வாங்கும் வேதனை, புகைப்பழக்கம் புற்றுநோயை உண்டாக்கும் போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்