போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு கூட்டம்
கோவில்பட்டி எவரெஸ்ட் மாரியப்ப நாடார் மேல்நிலைப் பள்ளியில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி எவரெஸ்ட் மாரியப்ப நாடார் மேல்நிலைப் பள்ளி கலையரங்கில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு பள்ளி தலைவர் மற்றும் செயலாளர் ஆர்.எ. அய்யனார் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் வெங்கடேசன் வரவேற்று பேசினார்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேஷ், நகரசபை தலைவர் கா. கருணாநிதி ஆகியோர் கலந்து கொண்டு பேசினா். சப்-இன்ஸ் பெக்டர் சிலுவை அந்தோணி, மாணவி சண்முகபிரியா ஆகியோர்
போதை பொருள் பழக்கத்தினால் ஏற்படும் தீமைகள் பற்றியும், தடுப்பது பற்றியும் பேசினர்.
தென்மண்டல குத்து சண்டை போட்டியில் 2-ம் இடம் பெற்ற மாணவன் முத்துசெல்வன், ஸ்கேட்டிங் சேம்பியன் போட்டியில் முதல் 3 இடங்கள் பெற்ற மாணவி செல்வபிரியா, மாணவர்கள் மனோரஞ்சன், சரவண பிரசாத், சாலை விழிப்புணர்வு போட்டியில் பங்கேற்ற மாணவர்கள் மாரி சக்திவேல், பிரதீஸ் ஆகியோருக்கு சிறப்பு விருந்தினர்கள் பரிசு வழங்கினா். நிகழ்ச்சியை ஆசிரியர் கார்த்தி கேயன்
தொகுத்து வழங்கினார். ஆசிரியை வளர்மதி நன்றி கூறினார்.