போதைப்பொருட்கள் கடத்திய வியாபாரி கைது

Update: 2023-07-05 18:45 GMT

மோகனூர்

மோகனூர் இன்ஸ்பெக்டர் இளைய சூரியன் மற்றும் போலீசார் அந்த பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது பாம்பாட்டி தெரு பகுதியில் சந்தேகப்படும்படியான வகையில் மோட்டார் சைக்கிளில் மூட்டையுடன் ஒருவர் நின்று கொண்டிருந்தார். போலீசார் அவரை பிடித்து விசாரணை செய்த போது முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தார். தொடர்ந்து போலீசார் அவரிடம் இருந்த மூட்டையை பிரித்துப் பார்த்தனர். அப்போது மூட்டையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் போன்ற போதைப்பொருட்கள் கடத்தி வந்து விற்பானை செய்தது தெரிந்தது. இதில் திருச்செங்கோடு ஆண்டிபாளையம் குடித்தெருவை சேர்ந்த பழனி மகன் தேவராஜ் (வயது 40) வியாபாரி மீது போலீசார் வழக்குப்பதிந்து அவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 20 கிலோ போதைப்பொருட்கள் மற்றும் மோட்டார்சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்