தாமிரபரணி ஆற்றில் மூழ்கி இளம்பெண் பலி

அம்பை தாமிரபரணி ஆற்றில் மூழ்கி இளம்பெண் பலியானார்.

Update: 2023-07-24 19:47 GMT

அம்பை:

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தளவாய்புரம் ஜீவாநகர் பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த ஜாபர் அலி மனைவி ஷிபானா (வயது 24). இவர் நேற்று முன்தினம் மதியம் தனது குடும்பத்தினருடன் நெல்லை மாவட்டத்திற்கு சுற்றுலா வந்தார். அம்பை காசிநாதர் கோவில் தாமிரபரணி ஆற்றில் ஷிபானா குளித்துக் கொண்டு இருந்தார். அப்போது, அவர் திடீரென ஆழமான பகுதிக்கு சென்று, நீரில் மூழ்கினார். இதைக்கண்ட அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு கரைக்கு கொண்டு வந்து, ஆம்புலன்ஸ் மூலம் அம்பை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ஷிபானாவை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து அம்பை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் திருமணமாகி 2 ஆண்டுகளே ஆன நிலையில் இளம்பெண் ஆற்றில் மூழ்கி இறந்தது குறித்து சேரன்மாதேவி உதவி கலெக்டர் விசாரணை செய்து வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்