வாகன ஓட்டிகளை காயப்படுத்தும் முள்செடிகள்

கொள்ளிடம் ஆற்றங்கரை சாலையில் வாகன ஓட்டிகளை முள்செடிகள் காயப்படுத்தி வருகின்றன. இதை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

Update: 2023-04-20 19:15 GMT

கொள்ளிடம் ஆற்றங்கரை சாலையில் வாகன ஓட்டிகளை முள்செடிகள் காயப்படுத்தி வருகின்றன. இதை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

முள்செடிகள்

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடத்தில் இருந்து குத்தவக்கரை, சரஸ்வதிவிளாகம், கொன்னகாட்டுபடுகை, கீரங்குடி, மாதிரவேளூர் வழியாக வடரங்கம் வரை கொள்ளிடம் ஆற்றங்கரையோரம் சாலை செல்கிறது.

இந்த சாலையில் குத்தவக்கரை கிராமத்தில் சாலையின் இருபுறங்களிலும் சீமைகருவேல முள் செடிகள் நீண்டு வளர்ந்து போக்குவரத்துக்கு இடையூறாக இருந்து வருகின்றன.

பள்ளி, கல்லூரி மாணவர்கள்

இதனால் கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் உள்ள கிராமங்களைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள், விவசாயிகள் கொள்ளிடம், சீர்காழி, சிதம்பரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு எளிதில் வந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

சைக்கிள் மற்றும் மோட்டார் சைக்கிள் போன்ற இருசக்கர வாகனங்களில் வந்து செல்லும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களும் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர்.

காயம் அடையும் வாகன ஓட்டிகள்

மாலை மற்றும் இரவு நேரங்களில் சைக்கிள் போன்ற இருசக்கர வாகனங்களில் செல்லும் போதும், கால்நடையாக செல்லும் போதும் சாலையின் இருபுறங்களிலும் உள்ள முள் செடிகள் உடலில் பட்டு வாகன ஓட்டிகள் காயம் அடைகிறார்கள். முள்ெசடிகள் வாகன ஓட்டிகளின் கண்ணில் பட்டு பெரும் அசம்பாவிதம் ஏற்படும் அபாயம் உள்ளது.

சாலையின் இருபுறங்களிலும் நீண்டு வளர்ந்துள்ள சீமை கருவேல முள் செடிகளை உடனடியாக அகற்றி ஆற்றங்கரை சாலையில் இருந்து வரும் போக்குவரத்துக்கான இடையூறை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்