தக்கலை அருகே டிரைவருக்கு கத்திக்குத்து; கொத்தனார் கைது

தக்கலை அருகே டிரைவருக்கு கத்திக்குத்து; கொத்தனார் கைது செய்யப்பட்டார்.;

Update: 2023-10-26 18:45 GMT

தக்கலை அருகே உள்ள முகமாத்தூர் பகுதியை சேர்ந்தவர் அஜய், டிரைவர். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கொத்தனார் அருண் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் சம்பவத்தன்று அவர்கள் இடைேய வாக்குவாதம் ஏற்பட்டு மோதி கொண்டனர். இதில் இருவரும் மாறிமாறி கத்தியால் குத்திகொண்டனர். படுகாயமடைந்த 2 பேரும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக இருவரும் தனித்தனியாக அளித்த புகாரின் பேரில் அஜய், அருண் உள்பட 4 பேர் மீது தக்கலை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்தநிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய அருணை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்