டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை

பாப்பாக்குடி அருகே டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-06-26 19:58 GMT

முக்கூடல்:

பாப்பாக்குடி அருகே உள்ள பனையங்குறிச்சி பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் இசக்கிராஜா (வயது 37). டிராக்டர் டிரைவரான இவருக்கு மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். சம்பவத்தன்று கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் விரக்தி அடைந்த இசக்கிராஜா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பாப்பாக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்