டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை

டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-09-12 19:20 GMT

திசையன்விளை:

திசையன்விளை இசக்கியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் செந்தூர்பாண்டி (வயது 42). டிரைவர். 20 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. குழந்தை இல்லை. இந்தநிலையில நேற்று முன்தினம் இவருடைய தாயாரின் முதலாம் ஆண்டு நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது. குழந்தை இல்லை என்ற விரக்தியிலும், தாயார் இறந்த துக்கம் தாளாமலும் செந்தூர் பாண்டி தனது வீட்டில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து அவரது மனைவி வான்மதி திசையன்விளை போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ஜமால் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்