ஜேடர்பாளையம் காவிரி ஆற்றில் மூழ்கிய டிரைவர் கதி என்ன?தேடும் பணி தீவிரம்

Update: 2023-07-16 19:00 GMT

பரமத்திவேலூர்:

ஜேடர்பாளையம் பரிசல் துைற காவிரி ஆற்றில் மூழ்கிய டிரைவரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

டிரைவர்

நாமக்கல் மாவட்டம் பரமத்தி அருகே உள்ள வெள்ளாளபாளையத்தை சேர்ந்தவர் மாரப்பன். இவருடைய மகன் சதீஷ்குமார் (வயது 22). இவர் நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் கோழிப்பண்ணையில் டிரைவராக வேலை செய்து வந்தார். இவருக்கு பிரியா (22) என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு குழந்தை இல்லை. சதீஷ்குமார் தனது நண்பர்களான மனோஜ் (22), மணிகண்டன் (19), வெங்கடேஷ் (19), கண்ணன் (23) ஆகியோருடன் நேற்று முன்தினம் மதியம் ஜேடர்பாளையத்தில் உள்ள பரிசல் துறை காவிரி ஆற்றுக்கு குளிக்க சென்றனர்.

அப்போது ஆற்றில் குளித்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக சதீஷ்குமார் காவிரி ஆற்றில் மூழ்கி விட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவருடைய நண்பர்கள் ஜேடர்பாளையம் போலீசார் மற்றும் நாமக்கல் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

தேடும் பணி தீவிரம்

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற தீயணைப்பு துறையினர் மீனவர்கள் உதவியுடன் காவிரி ஆற்றில் மூழ்கிய சதீஷ்குமாரை தேடினர். ஆனால் இரவு ஆகிவிட்டதால் தேடும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

இதையடுத்து நேற்று காலை முதல் ஆற்றில் மூழ்கிய சதீஷ்குமாரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. படுகை அணை பகுதியில் குளிப்பதற்கு தடை விதிகப்பட்டுள்ளதால் சதீஷ்குமார், அவருடைய நண்பர்கள் எப்படி சென்றார்கள் என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்