காதலித்த நர்சை திருமணம் செய்ய வற்புறுத்திய டிரைவர் கைது

காதலித்த நர்சை திருமணம் செய்ய வற்புறுத்திய டிரைவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-06-02 17:22 GMT

அணைக்கட்டு

பள்ளிகொண்டா மேலவாடி கீழாச்சூர் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். இவரது மகன் பரத் (வயது 22), டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரும் பள்ளிகொண்டா டி.கே.எஸ். நகர் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். பரத் காதலித்த பெண் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நர்சாக வேலை பார்த்து வருகின்றார். அவரிடம் என்னை திருமணம் செய்து கொள்ளவில்லை என்றால் உன்னை விடமாட்டேன் என பரத் செல்போனில் தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார்.

இதுகுறித்து அந்த பெண் அவரது பெற்றோருக்கு தகவல்தெரிவித்து, தான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளதாகவும், அதனால் முழுமையாக பணி செய்ய முடியவில்லை எனவும், அவரை நான் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று தெரிவித்துள்ளார். அதைத்தொடர்ந்து அவருடைய பெற்றோர் பள்ளிகொண்டா போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் பரத் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்