குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்

சாத்தூரில் குழாய் உடைந்து தண்ணீர் வீணாக செல்வதை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-06-02 19:33 GMT

சாத்தூர், 

சாத்தூர்-விருதுநகர் நான்கு வழிச்சாலை படந்தால் ரோடு சந்திக்கும் இடத்தில் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகி வருகிறது. இந்த குழாய் மூலமாக பெரியார் நகர் பகுதியில் உள்ள மேல்நிலை தொட்டிக்கு குடிநீர் ஏற்றப்பட்டு வருகிறது. இந்த குழாய் மூலமாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்ட பகுதி தேசிய நெடுஞ்சாலை துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஆதலால் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் குழாய் உடைப்பை சரி செய்ய தேசிய நெடுஞ்சாலைத்துறையினரின் அனுமதியை பெறவேண்டியுள்ளது. இவ்வாறு குடிநீர் வீணாகி செல்வதால் நகராட்சி மற்றும் கிராம ஊராட்சிகளுக்கு செல்லும் குடிநீர் அளவு குறைவதோடு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது. எனவே சாத்தூர் நகராட்சி நிர்வாகமும், குடிநீர் வடிகால் வாரியமும் உடன் நடவடிக்கை எடுத்து குழாய் உடைப்பை சரி செய்து தண்ணீர் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags:    

மேலும் செய்திகள்