தில்லைநகர், கண்டோன்மெண்ட் பகுதிகளில் இன்று குடிநீர் வினியோகம் நிறுத்தம்

தில்லைநகர், கண்டோன்மெண்ட் பகுதிகளில் இன்று குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது.

Update: 2022-12-12 20:03 GMT

திருச்சி மாநகராட்சி பராமரிப்பின் கீழ் இயங்கி வரும் பெரியார் நகர் நீரேற்று நிலையத்தில் இருந்து ஏற்றப்படும் குடிநீர் அப்பகுதி மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், மிளகுபாறையில் புதிதாக கட்டப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் புதிய இணைப்புகள் வழங்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. அதன்படி, பெரியார் நகர், தில்லைநகர், அண்ணாநகர், புத்தூர் புதியது, காஜாப்பேட்டை புதியது, காஜாப்பேட்டை பழையது, கண்டோன்மெண்ட் புதியது, கண்டோன்மெண்ட் பழையது, ஜங்ஷன், உய்யக்கொண்டான் திருமலை, தெற்கு ராமலிங்கநகர், பாத்திமாநகர், கருமண்டபம், காஜாமலை காலனி ஆகிய 14 பகுதிகளுக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது. மீண்டும் நாளை (புதன்கிழமை) குடிநீர் வினியோகம் வழக்கம்போல் நடைபெறும். இந்த தகவலை மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்